அடுத்த ஆண்டு முதல் இ-சிகரெட்டுகளை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க ஹாங்காங் அரசாங்கம் தயாராகி வருகிறது.
தேவையான சட்டம் இயற்றப்படும் என்று ஹாங்காங்கின் சுகாதார செயலாளர் லோ சுங்-மௌ கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்புடைய கொள்கைகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அவை செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஏப்ரல் 2022 முதல் சீனா இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது.