அரசியல் தூய்மையை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியம் எனவும், அதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“.. அரசியல் தூய்மைப்படுத்தல் நடவடிக்கையினையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அரசியலில் காணப்படும் சில கழிவுகளை வெளிப்படுத்த வேண்டும்.
ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் கிரமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், அரசியல் தூய்மையை உறுதி செய்வதற்குச் சட்ட நடவடிக்கைகள் அவசியமாயின் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது..” என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.