ஈரானின் பொருளாதாரத்துக்கு எதிராக புதிய தடைகளை விதித்ததற்காக ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் புதிய திட்டங்கள் தொடர்பில் ஈரான் அரசாங்கம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது புத்திசாலித்தனமானது இல்லை என அயதுல்லா அலி கமேனி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தனது பொருளாதார ரீதியிலான நட்பு நாடுகளுடன் சட்டப்பூர்வமான வர்த்தகத்தை மேற்கொள்வதைத் தடுத்து ஈரான் மீது அழுத்தங்களைக் கொடுக்க அமெரிக்காவின் புதிய நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஈரான் வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தடை விதிப்புகள் சட்டத்திற்குப் புறம்பானது என வெளி விவகார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஒருதலைபட்ச நடவடிக்கைகளின் விளைவுகளை அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.