follow the truth

follow the truth

February, 8, 2025
HomeTOP2USAID தொடர்பிலான டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

USAID தொடர்பிலான டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

Published on

USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் 2,200 பணியாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தற்காலிகமாக தடுத்துள்ளது.

இரண்டு தொழிற்சங்கங்கள் முன்வைத்த மனுவொன்றுக்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வரையறுக்கப்பட்ட வகையில் இந்த தற்காலிக தடையுத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் அறிவித்துள்ளார்.

வோஷிங்டன் டி.சி.யில் உள்ள USAID இனது தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வரி செலுத்துவோரின் மதிப்புமிக்க பணம் USAID ஊடாக முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி...

பிரேசிலில் பயங்கர விமான விபத்து : இருவர் பலி

பிரேசிலின் சாவ் பாலோ நகரில், நெரிசலான தெருவில் ஒரு இலகுரக விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியில் பயணித்த பேருந்து உட்பட...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவது பற்றிய வெளிப்பாடு

நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் சார்பாக...