சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது நாட்டின் உப்புப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என்று அதன் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
உப்பு இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடையும் என கனக அமரசிங்க வலியுறுத்துகிறார்.