follow the truth

follow the truth

February, 7, 2025
HomeTOP1ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

Published on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி என்றும், அந்தத் திட்டத்திற்கு ஏற்ப கல்வியை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நாட்டின் மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பதாக நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா(Yohei Sasakawa) இதன் போது தெரிவித்தார்.

குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆதரவை வழங்க தனது அமைப்பு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நாட்டின் கிராமப்புற மக்களிடையே வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக விசேட திட்டங்களைத் தொடங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன் போது கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் க்ரிஷ் கட்டிடத்தில் தீ

கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை...

குழாய் நீர் சர்ச்சை – விளக்கமளித்த நீர் வழங்கல் சபை

நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் தரம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிக்கை...

சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள்,...