follow the truth

follow the truth

February, 7, 2025
HomeTOP1ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி

Published on

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை தூதரகங்கள் இறப்புகளை உறுதிப்படுத்தியதாகவும், மேலும் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்த நாட்டிலுள்ள அவர்களில் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

GovPay மூலம் மக்களின் அலைச்சலும் அழுத்தமும் குறையும் – ஜனாதிபதி

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார...

டிஜிட்டல் மயமாக்கலில் முக்கிய திருப்புமுனை டிஜிட்டல் அடையாள அட்டை – ஜனாதிபதி

அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கலில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். அரசாங்க...

மினுவங்கொடை பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

மினுவங்கொடையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...