follow the truth

follow the truth

February, 7, 2025
HomeTOP1புதிய 03 டிஜிட்டல் தளங்கள் ஜனாதிபதி தலைமையில் இன்று அறிமுகம்

புதிய 03 டிஜிட்டல் தளங்கள் ஜனாதிபதி தலைமையில் இன்று அறிமுகம்

Published on

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச் செல்ல பாரிய அடியெடுத்து வைக்கும் வகையிலான 03 புதிய டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று(07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

அரசாங்கத்தின் அனைத்துவிதமான கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் GOVPAY வசதியை நடைமுறைப்படுத்தல், இதுவரையில் கொழும்பு தலைமை அலுவலகத்தில் மாத்திரம் இடம்பெற்ற ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலாளர் அலுவலகங்கள் வரையில் கொண்டுச் செல்லுதல் மற்றும் வௌிநாட்டு தூதரகங்களில் இலத்திரனியல் முறையில் பிறப்பு,திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதியை வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான (EBMD)வசதியளித்தல் என்பன நாளை முதல் ஆரம்பிக்கப்படும்.

இது தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கான ஊடக சந்திப்பில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தலைமையில் நேற்று(06) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்தை நனவாக்கி, இந்த புதிய தளத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன இதன்போது தெரிவித்தார்.

நிதியை அடிப்படையாக கொண்ட கொடுப்பனவுகள் ஊழல், மோசடிகள் அதிகரிக்கவும் கொடுக்கல் வாங்கல் முறையின் வினைத்திறனற்ற நிலைக்கு காரணமாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் இந்த சவால்களுக்கு முகம்கொடுக்க அனைத்து அரச கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், டிஜிட்டல் கொடுப்பனவை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் நம்பகமான சேவையை வழங்க முடியுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வௌிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களுக்கு நலன்புரி சேவைகளை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும்,வௌிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கு அந்தந்த நாடுகளிலிருக்கும் தூதரகங்கள் ஊடாக வினைத்திறன் மிகுந்த மற்றும் வசதியான சேவையை வழங்கும் நோக்கில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொடுப்பதற்கான EBMD வசதி நாளை ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படுமென வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.கே.பத்மநாதன் தெரிவித்தார்.

தற்போது பிறப்பு,திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள காலதாமதமாகும் முறைமைக்கு பதிலாக தொழில்நுட்பத்தின் மூலம் தூதகங்களுக்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக்கொண்டு தூதரகங்கள் ஊடாக பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் நாளை முதல் செயற்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துபாயில் கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று (07) நாட்டிற்கு அழைத்து வர...

எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து உறுதி

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் (கலாநிதி) சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில்...

கடவுச்சீட்டு கேட்டு மாணவர்களை அனுப்பி சிரமத்திற்குட்படுத்த வேண்டாம்

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் குறித்த...