follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP1ஜனாதிபதிக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும் இடையில் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 3 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வின் பின்னர் அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை அரசாங்கம் எட்டியுள்ளது.

இந்த மீளாய்வின் விடயங்கள் இந்த வருடம் பெப்ரவரி மாத இறுதியில் சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதுதொடர்பான முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் அந்தத் திட்டத்தை தொடர்வது குறித்த அரசாங்கத்தின் தலையீடு குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

IMF பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் இலங்கைக்கான நீட்டிக்கட்ட கடனுதவியின் நான்காவது தவணையாக 333 மில்லியன் டொலர் தொகை வழங்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் காலங்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் அரிசியின் கட்டுப்பாட்டு விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் தற்போதைய கட்டுப்பாட்டு...

எல்ல ஒடிஸி நானுஓயா என்ற புதிய ரயில் சேவை ஆரம்பம்

எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் நானு ஓயா மற்றும் பதுளை இடையே எல்ல ஒடிஸி நானு...

கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீப்பரவல்

கொழும்பு - கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தின் மேல் தளத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது 3...