ஒருநாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அறிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க இருபதுக்கு 20 போட்டியில் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னதாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் இந்த முடிவை எடுத்துள்ளமை அவரது இரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்குழாமில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.