follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP2வித்தியா கொலை வழக்கு - குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்டில்

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்டில்

Published on

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த மரணதண்டனைக்கு எதிராகக் குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று மூவரடங்கிய நீதியரசர் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி இந்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு நாளொன்றை ஒதுக்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.

அதன்படி உரிய மேன்முறையீட்டு மனுக்களை ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய நீதியரசர் ஆயம் உத்தரவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய முப்படைத் தளபதிகள் – ஜனாதிபதி சந்திப்பு

புதிய முப்படைத் தளபதிகள் இன்று(06) ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். புதிய இராணுவத்...

இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT)...

ஆர்ப்பாட்டப் பேரணி – லோட்டஸ் வீதி பகுதியில் கடும் வாகன நெரிசல்

மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில்...