தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2024) மதிப்பெண்கள் தொடர்பான மேன்முறையீடுகளை 2025 ஜனவரி 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.