காசா பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் என்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு, அதைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்ல என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லிவிட் தெரிவிக்கிறார்.
காசா பகுதியில் வசிக்கும் பலஸ்தீனியர்களை தற்காலிகமாக வேறு பகுதிகளுக்கு மாற்றுவதே டிரம்பின் அறிக்கையின் நோக்கம் என்று அவர் கூறினார்.
காசா பகுதியின் மறுகட்டமைப்புப் பணிகளில் அமெரிக்கா ஈடுபடாது என்றும், எந்த சூழ்நிலையிலும் காசா பகுதிக்கு படைகளை அனுப்பாது என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.