அரசாங்க நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி போலியான வேலை வெற்றிடங்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை மன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சின்னமும் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
போலி வலைத்தளங்கள் மூலம் தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக முறைப்பாடுகள் வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் இதுபோன்ற வலைத்தளங்களைப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்று மூத்த தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல மேலும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.