வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஜனவரி மாதத்தில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதத்தில் மட்டும் 252,761 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 43,375 ஆகும்.