follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP2USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை

USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை

Published on

உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ள அந்த முகவரகம், தமது அனைத்து பணியாளர்களும் அமெரிக்காவுக்கு மீளத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதற்கைமய, முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களைத் தவிர, USAID இன் ஏனைய அனைத்து நேரடி மற்றும் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களும் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு வெளியே பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கான ஒரு திட்டத்தைத் தயாரித்து வருவதாகவும், அதன் கீழ் அவர்கள் 30 நாட்களுக்குள் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் USAID தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பணம் செலுத்தி சாப்பிடும் எம்பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (05) முதல் தனது உணவுக்காக ரூ.2,000 செலுத்த வேண்டும். நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த...

சகல கிரிக்கெட் ரசிகர்களுக்கும் லசித் மாலிங்க விடுத்துள்ள கோரிக்கை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு...

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்...