இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அவரைச் சந்தித்த முதல் நாட்டுத் தலைவர் நெதன்யாகு ஆவார்.
பலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடி மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனியர்கள் தொடர்பான நெருக்கடி ஆகியவை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே விவாதப் பொருளாக இருந்தன.
பலஸ்தீனியர்களுக்கு ஜோர்டானில் தனி நிலத்தை வழங்கும் டிரம்பின் திட்டம் குறித்தும் நாட்டுத் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.
இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் ஹமாஸுக்கும் இடையே தற்போது போர் நிறுத்தம் உள்ளது. தனது தலையீட்டால்தான் போர் நிறுத்தம் வெற்றி பெற்றதாக டிரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஒரு பத்திரிகையாளர் டிரம்பிடம் அதற்காக நோபல் பரிசு பெற வேண்டுமா என்று கேட்டபோது, டிரம்ப், “ஆம், நான் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற வேண்டும்” என்று பதிலளித்தார். “ஆனால் அவர்கள் அதை எனக்குக் கொடுக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.” எனவும் தெரிவித்துள்ளார்.