follow the truth

follow the truth

February, 4, 2025
Homeஉள்நாடுஜனவரி மாதத்தில் 5,000 டெங்கு நோயாளர்கள்

ஜனவரி மாதத்தில் 5,000 டெங்கு நோயாளர்கள்

Published on

இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டில் சுமார் 5,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் இரண்டு டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாத இறுதிக்குள் டெங்கு அதிக ஆபத்துள்ள 16 மண்டலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதத்தில் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர், அதன் எண்ணிக்கை 764 ஆகும்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 674 நோயாளர்களும், கொழும்பு மாநகர சபை பகுதியில் இருந்து 608 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

காலி மாவட்டத்தில் இருந்து 315 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் இருந்து 303 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 278 நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 201 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க உதவி பெற்ற உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – நாமல்

இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்...

டீப்சீக்கிற்கு போட்டியாக ஓபன் ஏஐ களமிறக்கிய o3-mini

சீனாவின் டீப்சீக் (DeepSeek) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு (AI) போட்டியாக குறைந்த விலையில் o3 Mini என்ற சாட்ஜிபிடியை...

முதல் முறையாக நாட்டிலுள்ள குரங்குகளைக் கணக்கெடுக்க அரசு தீர்மானம்

குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம்...