follow the truth

follow the truth

February, 4, 2025
HomeTOP2டீப்சீக்கிற்கு போட்டியாக ஓபன் ஏஐ களமிறக்கிய o3-mini

டீப்சீக்கிற்கு போட்டியாக ஓபன் ஏஐ களமிறக்கிய o3-mini

Published on

சீனாவின் டீப்சீக் (DeepSeek) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு (AI) போட்டியாக குறைந்த விலையில் o3 Mini என்ற சாட்ஜிபிடியை (Chat GPT) ஓபன் ஏஐ (Open AI) நிறுவனம் களமிறக்கியுள்ளது.

சாட்ஜிபிடியின்(Chat GPT) வருகை தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதன்படி சாட்ஜிபிடியின்(Chat GPT) பலதரப்பட்ட அதிநவீன சேவைகளையும் பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

இந்தநிலையில் கடந்த வாரம் சீனாவைச் சேர்ந்த டீப்சீக்(DeepSeek) நிறுவனம் DeepSeek R1 என்ற புதிய AI தொழில்நுட்பத்தை வெளியிட்டது.

மேலும் இதற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் மிகக் குறைவு என்பதாலும், கட்டணமில்லா சேவைகளில் சாட் ஜிபிடியை விட அதிக வசதிகளை வழங்கியதாலும் பலரும் டீப்சீக் பக்கம் செல்லத்தொடங்கினர்.

இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையே ஸ்தம்பிக்கும் சூழல் உருவானது.

டீப்சீக் ஏஐக்கு போட்டியாக o3 Mini என்ற AI தொழில்நுட்பத்தை ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் மீண்டும் பயனர்களின் பார்வை ஓபன் ஏஐ பக்கம் திரும்பியுள்ளது. தொடர்ந்து இந்த AI போரில் ஏனைய நாடுகளும் தங்களது AI அம்சங்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க உதவி பெற்ற உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – நாமல்

இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்...

ஜனவரி மாதத்தில் 5,000 டெங்கு நோயாளர்கள்

இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டில் சுமார் 5,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

முதல் முறையாக நாட்டிலுள்ள குரங்குகளைக் கணக்கெடுக்க அரசு தீர்மானம்

குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம்...