சந்தையில் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகக் கடை உரிமையாளர்களும் நுகர்வோரும் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ உப்பு பக்கெட்டுகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டில் நிலவும் உப்புப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பைச் சந்தையில் வாங்கும் வாய்ப்பு இப்போது மக்களுக்குக் கிடைத்துள்ளது.
நாட்டில் வருடாந்த உப்பு நுகர்வு சுமார் 180,000 மெட்ரிக் டொன் ஆகும்.
மேலும் கடந்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக உப்பு உற்பத்தி வேகமாகக் குறைந்துள்ளது.
எதிர்பார்த்த அளவு உப்பு உற்பத்தி செய்ய முடியாமல் போனதால் நாட்டில் உப்பு பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
30,000 மெட்ரிக் டொன் உப்பு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் 400 கிராம் எடையுள்ள அத்தகைய இறக்குமதி செய்யப்பட்ட உப்பு பக்கெட் 150 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகக் கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்தனர்.