நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கிண்ணத்தினை கைப்பற்றியது.
இதில், இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான ஷிவம் துபே ஒரு புதுவித சாதனையைப் படைத்துள்ளார்.அது என்னவென்றால், இந்திய அணிக்காக 30 சர்வதேச டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக ஷிவம் துபே விளையாடிய அனைத்து டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அவர் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது முதல் டி20யை இந்திய அணிக்காக விளையாடினார். அதனைத் தொடர்ந்து தற்போது வரையில், தொடர்ச்சியாக அவர் களமிறங்கிய 30 போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.இவர் இதுவரை 35 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சொல்லப்போனால், சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டதிலிருந்து இந்தியா 30 போட்டிகளில் தோற்காமல் உள்ளது. இது ஒரு இந்திய வீரர் படைத்த சாதனை மட்டுமல்ல, உலகின் முதல் வீரரும் இவர் தான். இதன் மூலம், ஷிவம் துபே இந்திய அணியின் ‘Lucky Charm’ ஆக மாறியிருக்கிறார்.