இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவருமான திமுத் கருணாரத்ன, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுற்றுலா ஆஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போட்டி நாளை மறுநாள் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது திமுத் கருணாரத்னவின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
36 வயதான திமுத் கருணாரத்ன இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,172 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
ஒரு டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 244 ஆகும்.