follow the truth

follow the truth

February, 4, 2025
HomeTOP1பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

Published on

முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடம், முறைப்பாடுகளை ஏற்காமல், பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களும் பிற அதிகாரிகளும் இத்தகைய மறுப்புக்கு பல்வேறு காரணங்களை முன்வைப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தனது சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களுக்குப் பதிவாகும் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, இனிமேல், பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க முடியாது என்று பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மரணங்களை ஏற்படுத்தும் வெள்ளப் பேரிடர்

இலங்கை எதிர்கொள்ளும் இயற்கை இடர்களில் வெள்ளப்பெருக்கு முதன்மையானது. உயிரிழப்பு இடப் பெயர்வு, தொற்று நோய்களின் தாக்கம், என விளைவுகளின்...

வரி ஏய்ப்பு செய்ததாக பியூமி மற்றும் விராஜ் மீதான விசாரணைக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு

'அவுரா லங்கா' நிறுவனத்தின் தலைவர் விராஜ் தாபுகல மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோருக்கு எதிரான வருமான வரி செலுத்தாத...

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 68 இலங்கையர்கள்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்...