கொழும்புத் துறைமுகத்தில் I கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நாட்டில் பிரபலமான பிரச்சினை எழுந்தது.
தினமும் அண்ணளவாக 300 கொள்கலன்கள் அளவில் முறையாக பரிசோதனை செய்வதற்காக துறைமுகத்தினுள் குறைந்தது மூன்று நாட்களாவது நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படுவதனால் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரிக்கின்றது.
இது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கவனித்து, நியமித்த அமைச்சரவை உப குழுவின் தீர்மானத்திற்கு இணங்க துறைமுகத்திற்கு அண்மையில் உள்ள ப்ளூமெண்டல் நிலப்பகுதியில் ஐந்து ஏக்கரில் 2.5 ஏக்கர் பகுதியை முறையாக உருவாக்கி குறுங்கால தீர்வு ஒன்றாக ஜனவரி மாத இறுதி அளவில் சுங்கத்திற்கு வழங்குவதற்கு கலந்துரையாடப்பட்டது.
மிகவும் குறுகிய காலத்தினுள் விரைவாக தயாரிக்கப்பட்டு முடிக்கப்படக் கூடிய ப்ளூமெண்டல் வளாகத்தில் 2.5 ஏக்கர் அளவிலான பகுதி தற்காலிகமாக கொள்கலன்களின் வெளியாக இன்று (03) திறக்கப்பட்டது.