பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.