முன்னணி வணிகக் கூட்டு நிறுவனமா ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 85 வயது.
1940 இல் பிறந்த இவர், நாட்டிலும் பிராந்தியத்திலும் ஏராளமான நிறுவனப் பதவிகளை வகித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் முதல் இலங்கைத் தலைவராகவும், பிராண்ட்ஸ் லங்கா மற்றும் காமன்வெல்த் மேம்பாட்டுக் கழகத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.