தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கூட்டிணைந்து செயற்படுவதற்கான பொது ஆவணம், இன்றைய தினம் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான நேற்றைய சந்திப்பு, பொது ஆவணத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படாமல் நிறைவடைந்தது.
இந்த நிலையில், அது குறித்து ஆராய்ந்த குறித்த கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று மாலை, அந்த பொது ஆவணத்தை உறுதிசெய்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம், குறித்த பொது ஆவணத்தின் எழுத்துமூல வடிவம், முழுமையாக தயாரிக்கப்பட உள்ளதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதையடுத்து, எதிர்வரும் சில தினத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களது கையொப்பத்துடன், இந்தப் பொது ஆவணம் வெளியிடப்படவுள்ளது.
அந்த ஆவணம், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கும், அனைத்து உள்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கையளிக்கப்படும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.