நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், மூட்டு வலி, உடல் வலி மற்றும் மூக்கைச் சுற்றி கருமையாக மாறுதல் ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று நிபுணர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவமனைக்குச் சென்று உடனடி சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நுளம்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கேட்டுக் கொண்டார்.