கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையல், அவரது 36 வயது மூத்த சகோதரர் நேற்று கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று (31) அதிகாலை 3.30 மணியளவில் 33 வயது பாடசாலை ஆசிரியை ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் கம்புறுபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.