காலி – ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொலைபேசி தரவு பகுப்பாய்வு மற்றும் சிசிடிவி காணொளி காட்சிகளின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.