எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே காரணம் என எரிவாயு விபத்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி நியமித்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பொல இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சிலிண்டரில் இருந்த எரிவாயு சேர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்ததாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.