இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(2) மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.
காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று, மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான சேனாதிராஜா, யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (29) காலமானார்.