கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியுமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட ‘ஜெனீவா தோல்வியின் எதிரொலி’ நூல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜெனீவா நகரைத் தளமாகக் கொண்டு இலங்கையின் இறையாண்மையில் செல்வாக்கு செலுத்துவதற்கு பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளை ஆய்வுக்குட்படுத்தியும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயற்பாட்டில் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும், ஆனந்த தேரரினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான குணபால திஸ்ஸகுட்டியாரச்சியினால் எழுதப்பட்ட “அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள்” நூலும் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கொழும்பு ஹெவ்லொக் டவுன் சாம விஹாராதிபதி சங்கைக்குரிய அதபத்துகந்தே ஆனந்த தேரரும் கலந்துகொண்டிருந்தார்.