2024 ஆம் ஆண்டில் குழந்தை கர்ப்ப சம்பவங்கள் 213 ஆக அதிகரித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் 167 குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டில் இது அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2023 மற்றும் 2024 ஆண்டுகளை ஒப்பிடும்போது குழந்தை துஷ்பிரயோக சம்பவங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
“இலங்கையில் அதிகம் பதிவான பாலியல் துஷ்பிரயோகம். அவற்றில், காதல் உறவில் நிகழும் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, இதுவே அதிகம் பதிவாகியுள்ளது. அதாவது அது சம்மதத்துடன் நடக்கும் ஒன்று. 2023 ஆம் ஆண்டில், 1237, 2024 ஆம் ஆண்டில், 1,254 வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், குழந்தை கர்ப்பங்கள் 2023 இல் 167 ஆக இருந்து 2024 இல் 213 ஆக அதிகரித்துள்ளன. ”
மேலும், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2023 இல் 103 ஆகவும், 2024 இல் 123 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் ரேணுகா ஜெயசுந்தரா மேலும் தெரிவித்தார்.