தெற்கு அதிவேக வீதிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்த இன்று முதல் Lanka QR முறையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் கொட்டாவ பிரதான் இடமாறல் பகுதியில் இடம்பெற்றது.
தற்பொழுது இந்த திட்டம் தெற்கு அதிவேக வீதியில் மாத்திரம் நடைமுறைபடுத்த பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் ஏனைய வீதிகளுக்கும் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Lanka QR App பாவனை மூலம் எந்த ஒரு நபருக்கும் ஸ்கான் முறையில் பணம் செலுத்தும் சலுகை இதில் வழங்கபட்டுள்ளது.
இந்த முறையை நடைமுரைபடுத்துவதன் மூலம் பணத்தாள்களை பயன்படுத்தலை குறைத்தல் அதன் மூலம் கொவிட் அச்சத்தை தவிர்தல், அதிவேக வீதிகளின் நுழைவாயில் பகுதியில் உள்ள வாகன நெரிசலை குறைக்க முடியும் போன்ற பல்வேறு அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.