follow the truth

follow the truth

January, 30, 2025
HomeTOP1இன்றைய காலநிலை

இன்றைய காலநிலை

Published on

நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக் குடியரசில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான நூர் சவுதி அரேபியா திட்டம்

மதம் அல்லது இனம் எதுவாக இருந்தாலும், மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் சவுதி அரேபியாவின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில்,...

பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு விசேட விலை குறைப்பு

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதோசவால் வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு சிறப்பு விலை குறைப்பு...

இலங்கைக்கு எதிரான போட்டியில் உஸ்மான் கவாஜா இரட்டை சதம்

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான்...