follow the truth

follow the truth

April, 16, 2025
Homeலைஃப்ஸ்டைல்பிள்ளைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தரமற்ற பென்சில்கள்

பிள்ளைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தரமற்ற பென்சில்கள்

Published on

சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பென்சில்களில், குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சாதாரணமாகவே பென்சில்களை மெல்லும் குழந்தைகள் இதனால், நீண்டகால நோய்களால் பாதிக்கப்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள், சந்தையில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன.குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட பென்சில்கள் வண்ணமயமான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படுவதால், குழந்தைகள் அவற்றை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.

பென்சிலால் எழுதும் போதும் பென்சிலை கூர்மையாக்கும் போதும் சிறார்கள் தங்களை அறியாமலேயே பென்சிலை வாயில் வைத்து மென்று சாப்பிடுகின்றனர்.

குறிப்பாக பென்சில்கள் கவர்ச்சிகரமானதாக காணப்பட வேண்டுமென்பதால் அவற்றிற்கு அதிகளவு இரசாயனங்கள் மற்றும் பாதரசம், ஆர்சனிக், காட்மியம் போன்ற கன உலோகங்கள் பூசப்படுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்த வகையில் குழந்தைகள் பென்சில்களை மெல்லும்போது அவர்களின் உடலில் இந்த இரசாயனங்களின் தாக்கங்கள் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பென்சில்கள் மற்றும் வர்ணப் பென்சில்கள் உற்பத்திக்கு ஒரு சர்வதேச தர நிர்ணயம் காணப்படுவதுடன் EN71-3 தரநிலைக்கு சான்றுப்படுத்தப்பட்ட பென்சில்கள் 19 வகையான கன உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.இது உடலுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன.

எனினும், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் பல பென்சில்கள் இந்த சர்வதேச தரத்திற்கு உட்படாதவை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதவிடாய் பிரச்சனையா..? இனி கவலைய விடுங்க…

மாதவிடாய் பிரச்சனை என்பது இன்று பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது. சிலருக்கு மாதவிடாய் வராமல் தள்ளிப் போய்கொண்டே இருக்கும். வேறுசிலருக்கு மாதவிடாயின்...

குழந்தைகளை தாக்கும் ‘தக்காளி காய்ச்சல்’

கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் 'தக்காளி காய்ச்சல்' பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே...

பசி எடுக்கும்போது பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

அதிகாலையில் பசித்தால், அவசரத்துக்கு பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதுவே பழக்கமாகிவிடக் கூடாது. சிலபேர் காலையில் காபியுடன் ஒன்று...