எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்திற்காக சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இன்று நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தில் இன்று நடந்த நிகழ்வில் சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி இந்த பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் கையளித்தார்.