நாட்டில் 6 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தர நிலை சற்று மோசமான நிலைகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, காலி, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரக் குறியீடு (SL AQI) 0 முதல் 50 வரை இருந்தால் நல்லது என்றும், 51 முதல் 100 வரை இருந்தால் மிதமானது என்றும் கருதப்படுகிறது.
காற்றின் தரம் குறைவதால், உடல்நலக் பிரச்சினைகள் உள்ள நபர்கள், குறிப்பாக காற்று மாசுபாட்டினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.