follow the truth

follow the truth

January, 28, 2025
Homeஉலகம்லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு

Published on

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 18-ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பெப்ரவரி 18, 2025 வரை தொடர்ந்து அமுலில் இருக்கும்” என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட லெபனான் கைதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் டொனால்டு டிரம்பின் வெள்ளை மாளிகை கூறியது. இது இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இடையில் சிறிய அளவில் சண்டையை ஏற்படுத்தியது.

தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்நிறுத்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. நேற்றும் இஸ்ரேல் படைகள் 22 பேரை கொன்ற நிலையில் போர் நிறுத்தம் என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது என லெபனான் சுகாதார துறை தெரிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோமா நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் மிகப்பெரிய நகரான கோமாவினை அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வௌியேறியுள்ள...

பிரேசில் மக்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான...

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை இராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால்...