follow the truth

follow the truth

January, 28, 2025
HomeTOP1பாடசாலை மாணவியை மதுபானம் பருகச் செய்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

பாடசாலை மாணவியை மதுபானம் பருகச் செய்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

Published on

பெல்மதுல்ல பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை, மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபானத்தை அருந்திய குறித்த மாணவி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பெல்மதுல்ல நகரில் கார் ஒன்றில் வந்து இறங்கிய 19 வயது மாணவி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை குழுவொன்று விசாரித்துள்ளது.

இதன்போது அவர் மதுபானம் அருந்தியிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காருக்குள் இருந்த மற்றைய நபரும் மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அந்த நபர் மாணவியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த நபரை அங்கிருந்த குழுவினர் தாக்கியுள்ளதுடன், அவரை பெல்மதுல்ல பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 321 முறைப்பாடுகள்

சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த...

சவுதி 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் நன்கொடை

எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்திற்காக சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இன்று நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சவூதி...