follow the truth

follow the truth

January, 27, 2025
HomeTOP1யோஷித நீதிமன்றுக்கு

யோஷித நீதிமன்றுக்கு

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, நேற்று முன்தினம் (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.

இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றிருந்தது.

அதற்கமைய, அவரை இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் நன்கொடை

எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்திற்காக சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இன்று நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சவூதி...

6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி – எதிர்வரும் 29 வரை பார்வையிட வாய்ப்பு

சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை சில தினங்களுக்கு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம்...

காலி சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய குழு

காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சிறைச்சாலைகள் பிரதி அத்தியட்சகர் தலைமையில்...