follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP2தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து யோஷித விசேட சலுகைகள் எதையும் கோரவில்லை

தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து யோஷித விசேட சலுகைகள் எதையும் கோரவில்லை

Published on

இரத்மலானை பகுதியில் காணி கொள்வனவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஒரு பொது வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

யோஷித ராஜபக்ஷ அங்கு தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து சிறப்பு சலுகைகள் எதையும் கோரவில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி. வி. சானக இன்று (26) சிறைச்சாலைக்கு அவரை பார்வையிட வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால், சிறைச்சாலை கண்காணிப்பில் உள்ள யோஷித ராஜபக்ஷவை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையர் காமினி பி. திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் இன்சுலின் தட்டுப்பாடு இல்லை

அடுத்த நான்கு முதல் ஆறு மாத மாதங்களுக்கு தேவையான இன்சுலின் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தேவையற்ற அச்சம்...

சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க – ராஜித

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில்...

நீர்வழிப் போக்குவரத்து வசதிகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை...