follow the truth

follow the truth

January, 27, 2025
HomeTOP2உலக நாடுகளை கைவிட்ட வல்லரசு - பின்விளைவுகள் என்ன?

உலக நாடுகளை கைவிட்ட வல்லரசு – பின்விளைவுகள் என்ன?

Published on

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த 20ம் திகதி பதவியேற்றுக்கொண்டார்.

பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வரும் டிரம்ப் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அளித்து வந்த யுஎஸ்-எய்ட் நிதி உதவியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு போக்குதல், நோய் பாதிப்பைத்த் தடுக்க உதவுதல் உள்ளிட்டவற்றில் வளர்ச்சியில் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உலக வல்லரசான அமெரிக்காவின் நிதி உதவி கிடைத்து வந்தது.

யுஎஸ்-எய்ட் [USAID] என்ற சுயாதீன அமைப்பு இதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர்ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தின் கீழ் 2003-ல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய உதவிகளுக்கான நிதியை 90 நாட்களுக்கு முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் புதிதாக இனிமேல் ஏதும் நிதி வழங்கப்படாது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சூடான் உள்ளிட்ட கடும் பஞ்சத்தால் வாடும் நாடுகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஆண்டுதோறும் அமெரிக்காவிடமிருந்து ராணுவ உதவியாக 3.3 பில்லியின் டாலர் பெறுகிறது, எகிப்து 1.3 பில்லியின் டாலர் பெறுகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை இவ்விரு நாடுகளும் உறுதி செய்வதால் அவரின் நிதியில் டிரம்ப் கைவைக்கவில்லை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். நிதியுதவி அளிக்கத் தடை அமலில் உள்ள 90 நாட்களுக்குப் பின் உத்தரவை நீடிப்பதா அல்லது விலக்கிக்கொள்வதா என்று முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே பிராந்திய சிக்கல்களுக்கு அமெரிக்காவைப் பெரிதும் நம்பியுள்ள உக்ரைன், தைவான் மற்றும் எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியாவை உள்ளடக்கிய பால்டிக் நாடுகளை இந்த தடை மிகவும் பாதிக்கும்.

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஜோ பைடன் அதிக உதவிகளை அளித்து வந்த நிலையில் டிரம்ப்பின் நிதி நிறுத்தம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போதைக்கு போர்க்கால உதவிகள் ஏதும் நிறுத்தப்படவில்லை, கடவுளுக்கு நன்றி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் ஆறுதல் அடைந்துள்ளார்.

அமெரிக்காவின் இரக்கமற்ற இந்த முடிவின் விளைவு கொடூரமானதாக இருக்கும் என யுஎஸ் எய்ட் அமைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எய்ட்ஸ் நிவாரணத்திற்கான அமெரிக்க அதிபரின் அவசர நிதியுதவி திட்டமும் யுஎஸ் – எய்ட் நிதி முடக்கத்தால் பாதிக்கப்படும்.

அமெரிக்க உதவியை நிறுத்துவது, சீனா மற்றும் ரஷ்யா போன்ற போட்டியாளர்களிடம் இருந்து நிதியுதவி பெறும் நிர்பந்தத்துக்கு சர்வதேச நாடுகளை உட்படுத்தும் யுஎஸ் காங்கிரசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதர அமைப்பில் இருந்தும் அமெரிக்கா விளங்கியுள்ளதும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதர அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறுகியில், ஒரு நாடு எவ்வளவு வளமானதாக இருக்கிறதோ அதற்கேற்ப அந்த நாடு பிறநாடுகளின் மேம்பாட்டுக்காக நிதியுதவி செலுத்தும்.

ஒரு நாட்டின் ஜிடிபியில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அந்நாடு ஒதுக்கும். மிக முக்கியத்துவம் வாய்ந்த, மிகப்பெரிய நாடான அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிய முடிவு நல்லது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடையவில்லை.. – விஜித

கூட்டுறவு வாக்கெடுப்பின் முடிவுகளால் பொதுமக்களின் கருத்தை அளவிட முடியாது என்று வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்...

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 18-ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை...

“நாமல் இரண்டு வாரங்களுக்குள் உள்ளுக்குள்.. அரசாங்கத்தின் இரகசிய திட்டம் வெளியானது..”

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளதாக முன்னாள்...