follow the truth

follow the truth

January, 27, 2025
HomeTOP2ரூ.100 மில்லியன் இழப்பீடு கோரி ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கு கடிதம்

ரூ.100 மில்லியன் இழப்பீடு கோரி ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கு கடிதம்

Published on

நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்ட 15 அவதூறான, பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை வெளியிட்டமை தொடர்பாக முன்னாள் ஆளுநரின் சட்டத்தரணிகள் ஊடாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தல், கடத்தல்காரர் என்று மீண்டும் மீண்டும் கூறியமை, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை மேற்கொண்டமை, நிலங்களை விற்றமை மற்றும் அரசுக்கு உரித்தான மாமர கன்றுகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட 15 பொய்யான குற்றச்சாட்டுகளை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தமக்கு எதிராக முன்வைத்ததாக அந்த கடிதத்தில் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், முன்னாள் ஆளுநருக்கு கௌரவத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டவை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோனுக்கு 100 மில்லியன் ரூபாவினை அமைச்சர் சமந்த வித்யாரத்ன நட்டஈடாக செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யோஷிதவுக்கு பிணை

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை ‘சற்று’ அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை பெப்ரவரி மாதத்தில் "சற்று" அதிகரிக்கும் என்று தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பெப்ரவரி...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்த மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க...