follow the truth

follow the truth

January, 25, 2025
HomeTOP1கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற திட்டமிடலே பொலன்னறுவை வெள்ளப் பெருக்கை சந்திக்க காரணம் - மைத்திரி

கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற திட்டமிடலே பொலன்னறுவை வெள்ளப் பெருக்கை சந்திக்க காரணம் – மைத்திரி

Published on

பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முறையான ஒரு திட்டத்தை செயல்படுத்தத் தவறியதே இதற்குக் காரணம் என கூறியுள்ளார்.

“மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து சேகரிக்கப்படும் நீர் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மினிபே நீர்த்தேக்கத்திற்கு மட்டுமே செல்வதால், 2019 ஆம் ஆண்டில், மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்தின் பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக 15-20 கிலோ மீற்றர் கால்வாயை அமைத்து, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர். 2019 முதல் 2024 வரை வடமேல் மற்றும் அனுராதபுரத்திற்கான கால்வாய்களின் பணிகள் அப்போது நடைபெற்று வந்தன. ஆனால் அதனை தொடர்ச்சியாக அரசாங்கங்கள் செயல்படுத்தவில்லை” என்று மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 முதல் 2024 வரை வடமேல் பகுதிக்கும் மற்றும் அனுராதபுரத்திற்கும் செல்லும் முக்கிய கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தால், பொலன்னறுவை இவ்வளவு பேரழிவை சந்தித்திருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்திற்கு நீரை கொண்டு செல்லும் கால்வாய்களை நிர்மாணிக்கத் தொடங்கினால், பொலன்னறுவையை இத்தகைய அழிவில் இருந்து மீட்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்திற்குச் செல்லும் கால்வாய்கள் உடனடியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னார் காற்றாலை திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை – அதானி குழுமம் 

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள்...

ஏலக்காய் ஏன் மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது தெரியுமா?

பல மசாலாப்பொருட்களின் தாயகமாக இலங்கை உள்ளது. இலங்கையில் எண்ணற்ற மசாலா பொருட்கள் இருந்தாலும் ஏலக்காய் "மசாலாவின் ராணி" என்று...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை (25) அனுராதபுரத்தில் ஆரம்பமாக உள்ளது. கட்சியின்...