நிட்டம்புவ ஶ்ரீ விஜேராம விகாரையின் வருடாந்த பெரஹெர ஊர்வலம் நடைபெறவுள்ளதால் கொழும்பு – கண்டி பிரதான வீதியூடான வாகன போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளை நாளை இரவு 8.30 முதல் நள்ளிரவு 12 மணி வரையான காலப்பகுதியில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நிட்டம்புவ அத்தனகல்ல வீதி களுவாகஸ்வில ஶ்ரீ விஜயராம விகாரையில் ஆரம்பமாகும் பெரஹெர நிட்டம்புவ நகரை அடைந்து இடதுபுறமாக திரும்பி கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொழும்பு திசை நோக்கி பயணித்து வல்வத்த சந்தியில் வலதுபக்கமாக வித்யாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள ஶ்ரீ போதி விகாரையை சென்றடையவுள்ளது.
பெரஹெராவில் கலந்துகொள்வதற்காக பெருமளவானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாமென்பதால் இந்த காலப்பகுதியில் நிட்டம்புவ நகரம் முதல் மல்வத்த சந்தி வரை கொழும்பு மற்றும் கண்டி நோக்கி பயணிக்கும் திசையில் ஒருவழிப் போக்குவரத்தாக மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.