தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரண்டு மாத காலத்திற்குள் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதியதைச் செய்வதற்குப் பதிலாக, பழைய அரசாங்கங்களின் தவறுகளைத் திருத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இந்த காலகட்டத்தில், விக்கிரமசிங்க, ராஜபக்ஷ ஆகியோர் செய்த தவறுகளை திருத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
கொழும்பு துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.