follow the truth

follow the truth

January, 23, 2025
HomeTOP1ஜனாதிபதிக்கும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல்

Published on

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸில் சில இடமாற்றங்களை மேற்கொள்ள பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் மக்கள் சந்திப்பொன்றில் குற்றஞ்சாட்டினார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக சட்டரீதியாக தமது கடமைகளை மேற்கொண்டு வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாக நடத்துமாறு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அதன் பணிகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் உறுதியளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல ஒடிசி இ – டிக்கெட் மோசடியில் மேலும் இருவர் கைது

திருகோணமலையில் புகையிரத திணைக்களத்தில் கடமையாற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (22) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது...

COPD நோய் குறித்து வைத்தியர்களின் விசேட அறிவுறுத்தல்

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு COPD (Chronic Obstructive Pulmonary Disease) என்ற நாள்பட்ட நுரையீரல்...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...