முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து எந்த சந்தர்ப்பத்திலும் வெளியேறுவதற்குத் தயாராகவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தை பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான கடிதம் கிடைக்கும் வரையில் காத்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் சபையில் வெளிப்படுத்த வேண்டிய விடயங்களை அரசியல் மேடைகளில் வெளிப்படுத்துகின்றார்.
அதே போன்று சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.